Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 15 ஜனவரி (ஹி.ச.)
சேலம் மேட்டூரில் நடைபெறும் பொங்கல் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உற்சாகமாக பொங்கலை
கொண்டாடினார்.
விழாவில் பேசிய அவர் தெரிவித்ததாவது;
இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துகள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பெரியோர் சொல்வது போல நமக்கும் இந்த ஆண்டு வழி பிறக்கும்.
திராவிட முன்னேற்ற கழக ஆட்சி எப்போது அகற்றப்படுவேன் காத்திருக்கின்றனர்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக பாட்டாளி மக்கள் கட்சி கட்சியுடன் பலமான இன்னும் ஒரு சில கட்சிகள் வர இருக்கிறது.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி பிடிக்க போகிறோம்.
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு உலகம் பாராட்டக்கூடிய வகையில் சிறந்த பிரதமர் பெயர் இருக்கிறார்.
இந்தியாவில் பல மாநிலங்கள் ஒருங்கிணைத்து இந்தியா இருக்கிறது பல மொழிகள் இந்தியா செயல்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளது அனைவரும் இணைந்து வருகிற தேர்தலில் வெற்றி கொடியை காட்டுவோம்.
பொதுமக்கள் எப்போது தேர்தல் வரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொம்மை மட்டும் தமிழகத்தை ஆண்டு வருகிறார்.
தமிழகம் போராட்ட களம் மாறி உள்ளது .
தமிழகத்தில் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் போராட்டம் இல்லாத நாளை கிடையாது.
அடுத்த வருகிற தை திருநாளில் ஆளு கட்சியாக இந்த தைத்திருநாளை கொண்டாட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam