அரியானா மாநிலத்தின் அனைத்து துறைகளின் அலுவலக தொடர்புகளில் ஹரிஜன், கிரிஜன் வார்த்தைகளை பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் - மாநில அரசு உத்தரவு
அரியானா, 15 ஜனவரி (ஹி.ச.) அரியானா அரசாங்கம் ஒரு முக்கியமான ஆணையைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, ஹரிஜன், கிரிஜன் போன்ற சொற்களை அரியானா மாநிலத்தில் உள்ள எல்லா அரசு அலுவலகங்களிலும், அலுவல் ரீதியான தகவல் பரிமாற்றங்களில் உபயோகிக்கக் கூடாது. சாதாரணமாக,
அரியானா மாநிலத்தின் அனைத்து துறைகளின் அலுவலக தொடர்புகளில் ஹரிஜன், கிரிஜன் வார்த்தைகளை பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் - மாநில அரசு உத்தரவு


அரியானா, 15 ஜனவரி (ஹி.ச.)

அரியானா அரசாங்கம் ஒரு முக்கியமான ஆணையைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, ஹரிஜன், கிரிஜன் போன்ற சொற்களை அரியானா மாநிலத்தில் உள்ள எல்லா அரசு அலுவலகங்களிலும், அலுவல் ரீதியான தகவல் பரிமாற்றங்களில் உபயோகிக்கக் கூடாது.

சாதாரணமாக, இந்த வார்த்தைகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்தினரைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகின்றன.

அனைத்துத் துறைச் செயலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரைக் குறிப்பிட இந்த வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவதில்லை என்று திட்டவட்டமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விஷயம் அரசாங்கத்தால் கவனமாக ஆராயப்பட்டபோது, சில அரசுத் துறைகள் முன்பு வழங்கப்பட்ட அறிவுரைகளைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமானது.

இதன் விளைவாக, இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தாழ்த்தப்பட்ட மக்களை ஹரிஜன்ஸ் என்று குறிப்பிட்டார், அதற்கு கடவுளின் பிள்ளைகள் என்று பொருள்.

ஆனாலும், அம்பேத்கார் அவர்கள் அவ்வாறு அழைப்பதை எதிர்த்தார்.

அதற்கு பதிலாக அவர்களை தலித் என்று அழைக்க வேண்டுமென வற்புறுத்தினார்.

Hindusthan Samachar / JANAKI RAM