விடுதியில் விளையாட்டு வீராங்கனைகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை
கேரளா, 15 ஜனவரி (ஹி.ச.) கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி விளையாட்டு அரங்க வளாகத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மாணவர் விடுதி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் தங்கி படித்து வரும் நிலையில் இன்று காலையில
தற்கொலை


கேரளா, 15 ஜனவரி (ஹி.ச.)

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி விளையாட்டு

அரங்க வளாகத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மாணவர் விடுதி உள்ளது.

இங்கு

ஏராளமான மாணவ மாணவிகள் தங்கி படித்து வரும் நிலையில் இன்று காலையில் இங்கு

தங்கியிருந்த இரண்டு மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில்

காணப்பட்டனர்.

திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு பகுதிகளை சேர்ந்த பத்தாம்

வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளான இருவரும் விடுதியில் உள்ள ஒரு

அறையில் தங்கி இருந்தனர் நள்ளிரவில் இரண்டு மணி வரை சக மாணவிகள் இவர்களை கண்ட

நிலையில் இன்று அதிகாலை பாக்சிங் பயிற்சிக்காக சக மாணவிகள் அழைத்துச் செல்ல கதவை தட்டிய போது நீண்ட நேரம் திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்து விடுதி

ஊழியர்களிடம் தெரிவித்த நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இரு

மாணவிகளும் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டனர்.

இதனால் சக

மாணவிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் சம்பவம் தொடர்பாக கொல்லம் மாநகர

போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சடலங்களை கைப்பற்றி உடல் கூர்

ஆய்வுக்காக அனுப்பியதோடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதியில் விளையாட்டு வீராங்கனைகளான இரண்டு மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை

செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam