Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)
கடந்த வாரம், இன்ஸ்டாகிராம் உபயோகிப்பாளர்கள் பலர், கடவுச்சொல்லை மாற்றியமைப்பது தொடர்பான மின்னஞ்சல்கள் தங்களுக்குத் தானாக வந்ததாகக் குறை கூறினர்.
இது பற்றி ஆராய்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான மால்வேர்பைட்ஸ், இன்ஸ்டாகிராமில் சுமார் 1 கோடியே 75 லட்சம் பயனர்களின் அந்தரங்கத் தகவல்கள் கசிந்திருப்பதாகத் தெரிவித்தது.
குறிப்பாக, பயனர்களின் வீட்டு முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் போன்ற முக்கியமான விவரங்கள் கசிந்திருப்பதாகவும், இந்தத் தகவல்கள் டார்க் வெப்சைட்டில் விற்பனைக்கு வந்திருப்பதாகவும் மால்வேர்பைட்ஸ் நிறுவனம் சொல்லியிருந்தது.
இதனால், இன்ஸ்டாகிராம் உபயோகிப்பாளர்கள் கலக்கமடைந்தனர்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பயனர்களின் தகவல்கள் எல்லாம் பாதுகாப்பாக இருப்பதாக மெட்டா நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
கடவுச்சொல்லை மாற்றியமைப்பது சம்பந்தமான மின்னஞ்சல்களை பயனர்கள் பொருட்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ள மெட்டா நிறுவனம், இதனால் ஏற்பட்ட மனக்குழப்பத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் சொல்லியிருக்கிறது.
Hindusthan Samachar / JANAKI RAM