Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி வளாகத்தில் சென்னை சங்கமம் கலைஞர்கள் உடன் திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி பொங்கல் பண்டிகை கொண்டாடினார்.
இந்நிகழ்வில் கரக்காட்டம், மயிலாட்டம், பறை இசை வாத்தியங்கள் முழுங்க ஏராளமான கலைநிகழ்ச்சிகளும் களரி உள்ளிட்ட வீர விளையாட்டுகளும் நடைபெற்றது.
மேலும் சென்னை சங்கமம் கலைஞர்களுக்கு பொங்கலை முன்னிட்டு புத்தாடைகளையும் கனிமொழி கருணாநிதி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி,
பராசக்தி திரைப்படக்குழுவினர் உடன் பிரதமர் மோடி பொங்கல் விழா கொண்டாடியது குறித்து விமர்சித்தார்.
நம்ம பொங்கலை பற்றி நாம் பேசுவோம், தேர்தலுக்கு தேர்தல் பொங்கல் நினைவு வரக்கூடியவர்களைப் பற்றி பேசி பயனில்லை எனவும் அவர்கள் யார் என மக்களுக்கு மிகத் தெளிவாக அடையாளம் தெரியும், அதனால் இதை எல்லாம் நம்பி ஏமாற கூடியவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இல்லை என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் பராசக்தி திரைப்படத்தை விமர்சனம் செய்துள்ளனர் என்ற கேள்விக்கு,
பராசக்தி படம் இன்னும் பார்க்கவில்லை, பார்க்காத படத்தைப் பற்றி எப்படி கூற முடியும். தேர்தலுக்கு தேர்தல் தமிழர்களை பற்றி, தமிழ்நாட்டை பற்றி, தமிழ் மொழியை பற்றி அக்கரைப்படக் கூடியவர்கள், இந்தியை கொண்டு வந்து தமிழ்நாட்டில் திணிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தராதவர்கள் திடீரென தேர்தல் வந்தவுடன் தமிழர்களை பற்றி நினைவுக்கு வரும்போது அவர்கள் யார் என தமிழர்களுக்கு தெளிவாக தெரியும் என கூறினார்.
அதனால் அதை நம்பி தமிழ் மக்கள் ஏமாற தயாராக இல்லை என தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழக அரசின் கருத்தை மத்திய அரசு கேட்டுள்ளது என்ற கேள்விக்கு,
இது குறித்து முதலமைச்சரும், தமிழக அரசும் ஏற்கனவே தெளிவாக இதை நாங்கள் எதிர்க்கிறோம் என தெரிவித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தமிழக அரசு உரிய விளக்கத்தை அளிக்கும் என தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளதா என்ற கேள்விக்கு,
சினிமாவையும் அரசியலையும் கலக்கும் போது தான் பிரச்சனை வருகிறது. முதலில் கலைஞர் எழுதிய பராசக்தி படம் சென்சாரில் எந்த அளவுக்கு பாடுபட்டு வெளியிடப்பட்டது என எல்லாம் தெரியும்.
எனவே சென்சாரை Tool ஆக மாற்றப்படும் போது மக்களுக்கு எதிரானதாகவும், ஆளும் கட்சி கையில் இருக்கக்கூடிய ஆயுதமாகவும், பயன்படுத்தும் போதும், அமலாக்கத்துறை, சிபிஐ என எல்லாமே அப்படித்தான் இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு சூழல் நிச்சயமாக முதலமைச்சர் இதற்கு தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ