Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குத்துறை அமைச்சர் சிவசங்கரன்
அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது பேருந்தில் கூட்டம் நிரம்பிய போதிலும், இரண்டு மூன்று பயணிகளுக்காக
பேருந்துகள் காத்திருந்தபோது அமைச்சர் உடனடியாக பேருந்துகளை எடுக்குமாறு
அடுத்த அடுத்த பேருந்துகளில் வரும் பயணிகள் பயணிக்கலாம் என கூறி காத்திருந்த
அனைத்து பேருந்துகளையும் உடனடியாக எடுக்க உத்தரவிட்டார்.
மேலும் ஆமனி பேருந்துகளை பார்வையிட பத்திரிகையாளர் சொன்ன போது புகார்கள்
வந்தால் பார்வையிடலாம் உங்கள் ஆசைக்கு சென்றால் நேரம் இருக்காது மேலும்
நீங்கள் வீட்டிற்கு போ சென்று விடுவீர்கள் என தெரிவித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர்,
கடந்த ஆறு நாட்களாக சிறப்பு பேருந்துகளுடன்,வழக்கம் போல பேருந்துகளும்
இயக்கப்படுகின்றன.
இரவு 9 மணி அளவில் 20, ஆயிரத்து 400 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
இதுவரை
சென்னையிலிருந்து ஒன்பது லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு
சென்றுள்ளனர்.
முன்பதிவு பொருத்தவரை கடந்த ஆண்டு வரை இந்த ஆண்டு அதிகமாகவே முன்பதிவு செய்துள்ளனர் .
எவ்வளவு நபர்கள் வந்தாலும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு பேருந்துகள் தயார்
நிலையில் உள்ளது.
அதேபோன்று உங்களை முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பும் பயணிகளுக்கு
16-ம் தேதி முதல் 19-தேதி வரையில் ஆக மொத்தம் 8368 வழக்கமான பேருந்துகளும்,
6820 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் சென்னைக்கு வருவதற்கு பேருந்துகள்
தயார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam