திருமணம் ஆனதை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றிய இன்ஜினியர் கைது!
கன்னியாகுமரி, 15 ஜனவரி (ஹி.ச.) குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே செங்கோடு புல்லன்விளையை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் அபிஷ் (30). இன்ஜினியரான இவர் துபாயில் வேலை செய்து வந்தார். தற்போது சொந்த ஊரில் இருந்து வருகிறார். இவரது மனைவி 5 மாதம் கர்
Arrest


கன்னியாகுமரி, 15 ஜனவரி (ஹி.ச.)

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே செங்கோடு புல்லன்விளையை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் அபிஷ் (30). இன்ஜினியரான இவர் துபாயில் வேலை செய்து வந்தார். தற்போது சொந்த ஊரில் இருந்து வருகிறார்.

இவரது மனைவி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். அபிசுக்கும், புதுச்சேரியை சேர்ந்த 24 வயதான பெண் நடன கலைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அபிஷ் திருமணமானதை மறைத்து பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. அவ்வப்போது இருவரும் வெளியில் சுற்றி வந்தனர். அப்போது அபிஷ் அந்த பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி வந்துள்ளார்.

இதையடுத்து, அபிஷ் கடந்த சில மாதங்களாக அந்த பெண்ணை குமரி மாவட்டத்திற்கு வரவழைத்து திற்பரப்பு உள்பட பல சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்றது மட்டுமல்லாமல் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனால் அவர் 4 மாத கர்ப்பமானார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அபிசுக்கு ஏற்கனவே திருமணமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அபிஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்து வந்துள்ளார்.

ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனையடுத்து போலீசார் அபிஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN