தேசத்துக்காக இன்னுயிர் நீத்த வீரர்களை மரியாதையுடன் நினைவு கூர்வோம் -  பிரதமர் மோடி ராணுவ தின நல்வாழ்த்து
புதுடெல்லி, 15 ஜனவரி (ஹி.ச.) நம் நாடு அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்ட பிறகு சுதந்திர இந்தியாவின் முதலாவது இந்திய ராணுவ தலைமை தளபதியாக கே.எம். கரியப்பா பொறுப்பேற்றார். அவர் 1949-ம் வருடம் ஜனவரி மாதம் 15-ந் தேதி பதவி ஏற்றார். இதனை நினைவு கூறும் வி
தேசத்துக்காக இன்னுயிர் நீத்த வீரர்களை மரியாதையுடன் நினைவு கூர்வோம் -  பிரதமர் மோடி ராணுவ தின நல்வாழ்த்து


புதுடெல்லி, 15 ஜனவரி (ஹி.ச.)

நம் நாடு அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்ட பிறகு சுதந்திர இந்தியாவின் முதலாவது இந்திய ராணுவ தலைமை தளபதியாக கே.எம். கரியப்பா பொறுப்பேற்றார். அவர் 1949-ம் வருடம் ஜனவரி மாதம் 15-ந் தேதி பதவி ஏற்றார்.

இதனை நினைவு கூறும் விதமாக தேசத்தில் வருடா வருடம் ராணுவ தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், 78-வது ராணுவ தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனை ஒட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரத்தில் இன்று ராணுவ அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

ஜெகத்புரா பகுதியில் இருக்கின்ற, ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ராணுவ முகாமுக்கு வெளியே முதன்முறையாக இந்த ராணுவ அணிவகுப்பு நடக்கிறது.

இதனையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில்,

இந்திய ராணுவத்தின் அஞ்சாமை மற்றும் அர்ப்பணிப்புக்கு, ராணுவ தினத்தில், நாம் வணக்கம் செலுத்துவோம். நம்முடைய ராணுவ வீரர்கள் சுயநலமற்ற சேவையின் எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர்.

எவ்வித சவாலான சூழல்களிலும் அசைக்க முடியாத மனத்திண்மையுடன் செயலாற்றி, தேசத்தை காப்பாற்றுகிறார்கள். அவர்களின் ஈடுபாடு, தேசம் முழுதும் உள்ள மக்களிடையே நம்பிக்கையையும், நன்றியையும் பெருகச் செய்கிறது.

என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ பணிகளின்போது, தேசத்துக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்களை மிகுந்த மரியாதையுடன் நாம் நினைவு கூர்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM