புதுடெல்லியில் 28-வது காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு - பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைக்கிறார்
புதுடெல்லி, 15 ஜனவரி (ஹி.ச.) காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு 28-வது முறையாக இன்று (வியாழன்) புதுடெல்லி பாராளுமன்ற மைய அரங்கில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் தலைமைப் பொறுப்பை பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்கிறார். கூட்டத்தை பிரதமர்
இன்று டெல்லியில் 28-வது காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு - தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி


புதுடெல்லி, 15 ஜனவரி (ஹி.ச.)

காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு 28-வது முறையாக இன்று (வியாழன்) புதுடெல்லி பாராளுமன்ற மைய அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டின் தலைமைப் பொறுப்பை பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்கிறார்.

கூட்டத்தை பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்து உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில் காமன்வெல்த் நாடுகளைச் சார்ந்த 42 சபாநாயகர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள் என்று ஓம்பிர்லா கூறியுள்ளார்.

சமகாலத்தில் பாராளுமன்றத்தில் உள்ள சிக்கல்கள், பாராளுமன்ற நடவடிக்கையில் செயற்கை நுண்ணறிவின் உபயோகம், பாராளுமன்ற உறுப்பினர்களின் மேல் சமூக ஊடகங்களின் பிரதிபலிப்பு போன்ற பல விஷயங்களை பற்றி இந்த மாநாட்டில் கலந்துரையாட இருப்பதாக பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / JANAKI RAM