தமிழில் பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்த பிரதமர் மோடி
புதுடெல்லி, 15 ஜனவரி (ஹி.ச.) இன்று தமிழகத்தில் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பொங்கல் திருநாளையெட்டி உங்களுக
தமிழில் பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்த பிரதமர் மோடி


புதுடெல்லி, 15 ஜனவரி (ஹி.ச.)

இன்று தமிழகத்தில் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

பொங்கல் திருநாளையெட்டி உங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

மக்களை ஒன்றிணைத்து, நமது சமுதாயத்தில் பாசத்தையும், ஒருமையையும் வளர்க்கும் பொங்கல் திருவிழாவைக் காண்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயத்தின் இன்றியமையாமையையும், உழைப்பின் மேன்மையையும் நினைவூட்டும் இந்த இனிய நாள், நமது கலாச்சாரத்தின் உன்னத கொள்கைகளை எடுத்துக்காட்டுகிறது.

இந்த பொங்கல், உங்கள் லட்சியங்களை அடைய புதிய உத்வேகத்தையும், ஊக்கத்தையும் தரட்டும். எல்லோருக்கும் நிறைந்த சுகமும், வளமும் கிடைக்க வேண்டும் என்று உளமாற வேண்டுகிறேன்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM