Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)
அன்புநிறை தமிழக மக்களுக்கு எனது கனிவான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
உழைப்பின் உன்னதத்தையும், இயற்கையின் கொடையையும் போற்றும் உன்னதத் திருவிழாவான இந்தப் பொங்கல் நன்னாள், நம் அனைவரது வாழ்விலும் புதிய ஒளியை ஏற்றி வைக்கட்டும்.
இந்த அறுவடைப் பண்டிகை, மக்களிடையே நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் பகிரப்பட்ட செழிப்பு ஆகிய பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த என்வேண்டும் என விழைகிறேன்.
ஒரு சமூகம் முழுமையான வளர்ச்சியை அடைய வேண்டுமானால், அங்கு சமத்துவமும் நீதியும் நிலைபெற வேண்டும். அந்த வகையில், இந்தப் பொங்கல் திருநாள் அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கவும்,
ஒவ்வொரு மனிதரும் தகுந்த கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்யவும்,
அனைவரது நல்வாழ்விற்காகவும் நாம் அனைவரும் சாதி, மத பேதமின்றி ஒன்றிணைந்து செயல்பட ஊக்கமளிக்கட்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ