Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 15 ஜனவரி (ஹி.ச.)
நெல்லையிலிருந்து தாம்பரத்திற்கு தென்காசி வழியாக ஞாயிற்றுக்கிழமை அன்று இயக்கப்பட இருக்கும் நெல்லை- தாம்பரம் சிறப்பு ரயிலின் முன்பதிவானது தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே முடிவடைந்துள்ளது.
குறிப்பாக, பொங்கல் பண்டிகை முடிந்து பணிக்கு திரும்புவர்களின் வசதிக்காக நெல்லை- தாம்பரம் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயிலானது நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே முன்பதிவு இருக்கைகள் முடிவடைந்த நிலையில், மேலும் சிறப்பு ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, இந்த ரயிலானது நெல்லையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்தை மறுநாள் அதிகாலை 3 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN