Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 15 ஜனவரி (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
மரலி கை தீண்டா ஆண்டவர்கள் மெய் மதத்தினர் சாதி மத பாகுபாடுகளை கலைந்து அந்த கிராமத்தில் அமைந்துள்ள பொன்னரங்க தேவாலய வளாகத்தில் ஒன்று திரண்டு ஒரே நேரத்தில் அடுப்பு மூட்டி பொங்கல் வைத்தனர்.
இந்த பொங்கல் பண்டிகையின் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளிலும் உள்ள மெய் மதத்தைச் சேர்ந்த அனைவரும் இந்த பொங்கல் பண்டிகைக்காக மெய் வழிச்சாலையில் ஒன்று கூடி பொங்கலை கொண்டாடினர்.
காண்பதற்கு இந்த விழா வினோதமாக காணப்பட்டாலும் இன்றளவும் அந்த கிராமத்தில் சாதி மத பாகுபாடு இன்றி அனைத்து மக்களும் தம்பியை சகோதர பாசத்துடனும் தங்களுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்துடனும் அதே வேலையில் தமிழர்களின் பாரம்பரியத்தை கைவிட்டு விடாமல் அப்படியே பின் தொடந்தும் பொங்கல் விழாவை அவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடியது காண்போருக்கு நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / Durai.J