Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)
உழவர்களின் பண்டிகையாகவும், தமிழர் திருநாளாகவும் அறியப்படும் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 1ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.
தொடர்ந்து ஜனவரி 16ம் தேதியான நாளை மாட்டு பொங்கலும், ஜனவரி 17ம் தேதி சனிக்கிழமை காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை அன்று விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காலை வேளயிைல் புத்தாடை அணிந்து வீட்டிற்கு முன்பு மண்பானைகளில் சர்க்கரை பொங்கல் சமைத்து சூரியனுக்கு படைக்கின்றனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையான இன்று அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். பால் பொங்கி வரும்போது “பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட்டும், குலவையிட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் கிராமங்கள், நகரங்களில் இன்றும், நாளையும் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
மேலும் பொங்கல் திருநாளை தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி, அனைத்து உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ வேண்டுமென பலரும் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் வளமும், நலமும் பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b