முதலீட்டை ஈர்ப்பதற்காக பிப்ரவரி மாதம் இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் செல்ல பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆகியோருக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
பஞ்சாப், 15 ஜனவரி (ஹி.ச.) சீனியர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்வதற்கு, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் இருந்து அரசியல் சார்ந்த அனுமதி பெறுவது கட்டாயமாகும். முதலீடுகளைப் பெறுவதற்காக இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலுக்குச் செல்லவிரு
முதலீட்டை ஈர்ப்பதற்காக பிப்ரவரி மாதம் இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் செல்ல பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆகியோருக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு


பஞ்சாப், 15 ஜனவரி (ஹி.ச.)

சீனியர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்வதற்கு, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் இருந்து அரசியல் சார்ந்த அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

முதலீடுகளைப் பெறுவதற்காக இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவத் மான் மற்றும் தொழில்துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா ஆகியோருக்கு ஒன்றிய அரசு அரசியல் சம்பந்தமான அனுமதி அளிக்க மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி குறிப்பிட்டுள்ளது.

மேலும், இது போன்ற அனுமதி மறுக்கப்படுவது இதுவே முதல் முறை அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் முதலமைச்சர் பகவத் மான் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆகியோர் இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

அவர்களுடன் ஒரு சில அரசாங்க அதிகாரிகளும் பயணிக்க உள்ளனர். அனுமதி வழங்கப்பட்டால் சரியான நாள் முடிவு செய்யப்படும்.

இருப்பினும், ஒன்றிய அரசு அரசியல் அனுமதியை அளிக்கவில்லை.

அதற்கான காரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM