தேர்தல் தொடர்பாக வரும் 18-ஆம் தேதி டெல்லியில் தமிழக நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி நடத்த விருந்த கூட்டம் திடீர் ரத்து
சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.) தமிழக தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் தமிழக மாநில நிர்வாகிகள் மற்றும் தேசிய அளவிலான தலைவர்களுடன் வரும் 18 ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்த
ராகுல்


சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)

தமிழக தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் தமிழக மாநில நிர்வாகிகள் மற்றும் தேசிய அளவிலான தலைவர்களுடன் வரும் 18 ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்வார் என அறிவித்திருந்தனர்.

எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீர் என நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்வில் கடுமையான முறைகேடுகள் நடந்திருப்பதாக டெல்லி தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது மற்றும் திமுக கூட்டணி பேச்சு வார்த்தையை இன்னும் தொடங்காமல் உள்ளது திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மேலும் உரசலை உருவாக்கியுள்ளதால் கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ