Enter your Email Address to subscribe to our newsletters

இராசிபுரம், 15 ஜனவரி (ஹி.ச.)
நெருங்கும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ராசிபுரம் பகுதியில் இருந்து முருக பக்தர்கள் ஸ்ரீ பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக
புறப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதியில் இருந்து பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு வழிநெடுக அன்னதானம், குடிநீர் ,பிஸ்கட் பாக்கெட்டுகள் , பால்
வழங்கி வருகிறார்கள்.
15-ம் ஆண்டாக பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு விடிய விடிய அன்னதானம் வழங்கும்
ராசிலிங்க ஆன்மிக வழிபாட்டு குழு வழங்கி வருகின்றனர்.
இராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பழனி பாதயாத்திரை
செல்லும் பக்தர்களுக்கு ராசிலிங்க ஆன்மிக குழு சார்பாக விடிய விடிய சுமார் 10,000 இட்லி களை சுட சுட அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
தைப்பூசத்தை யொட்டி, பழநிக்கு பாதயாத்திரையாக ஆட்டோ மற்றும் வேன்களில் முருகன் சிலைகளை நிறுவி, பக்தி பாடல் இசைக்க, காவடி ஏந்தி, முருக வேல் கையில் ஏந்தி
பச்சை ஆடைகள் அணிந்து வரும் பக்தர்களுக்காக, இராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் முன் பழநிமுருகன் அன்னதானக் குடில்
அமைக்கப்பட்டுள்ளது.
15ம் தேதி மாலை வரை அன்னதானம் நடைபெறுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam