Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)
அண்மையில் VIBE WITH MKS நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது இசைக்கலைஞர்கள், பாடகர்களுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
தற்போது இசைக்கலைஞர்களுடன் கலந்துரையாடி முதல்வர் பாடி அசத்தும் வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.
அந்த வீடியோவில் இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை. உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை என்ற பாடலை முதல்வர் ஸ்டாலின் இசை கலைஞர் உடன் இணைந்து பாடியுள்ளார்.
மேலும் “நான் எம்ஜிஆர் பாடல்களை விரும்பிக் கேட்பேன்; குறிப்பாக 'அச்சம் என்பது மடமையடா பாடல் மிகவும் பிடிக்கும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த கலந்துரையாடல் வீடியோவை இன்று
(ஜனவரி 15) தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது,
தமிழ்நாட்டின் ஆன்மா அதன் இசையின் மூலம் பேசுகிறது. அது ஊக்கமளிக்கிறது, பாரம்பரியத்தைப் பாதுகாக்கிறது, பரிணாமம் அடைகிறது.
எங்கள் திறமையான இசைக்கலைஞர்கள் சிலருடன் நேரம் செலவிட்டு, அவர்களின் கலையாற்றல், அவர்களின் ஆற்றல், அவர்களின் உலகம் ஆகியவற்றை அறிந்துகொண்டேன். அவர்கள் வெறும் இசையை மட்டும் உருவாக்கவில்லை; அவர்கள் நமது பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள், மேலும் அதன் எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள்.
பண்பாட்டைக் கொண்டாடும், பேரார்வத்தை மதிக்கும், உண்மையான கலைத்திறனை அங்கீகரிக்கும் உரையாடல்கள்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b