தவெக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்து
சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.) தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு
தவெக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்து


சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தவெக தலைவர் நடிகர் விஜய் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் இன்று (ஜனவரி 15) கூறியிருப்பதாவது,

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும்.

அனைவருக்கும்

வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b