மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் ஜான் பென்னிகுவிக்கை என்னாலும் போற்றி வணங்குவோம் - டிடிவி தினகரன்
சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.) தென் தமிழக மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் ஜான் பென்னிகுவிக்கை என்னாலும் போற்றி வணங்குவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெள
Ttv


Tw


சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)

தென் தமிழக மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் ஜான் பென்னிகுவிக்கை என்னாலும் போற்றி வணங்குவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தென் தமிழகத்தின் நீர் ஆதாரமான முல்லைப் பெரியாறு அணையை கட்டி வறண்டு கிடந்த பூமியை வளமான விளைநிலங்களாக மாற்றியதோடு, மக்கள் மத்தியில் நிலவிய உணவுப் பஞ்சத்தையும் போக்கிய மாமனிதர் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்த தினம் இன்று

கடுமையான மழை, காட்டாற்று வெள்ளம் என பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் தன் சொந்த நிதியை செலவழித்து அணையை கட்டி முடித்து தென் தமிழக மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் ஜான் பென்னிகுவிக் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்

Hindusthan Samachar / P YUVARAJ