Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 15 ஜனவரி (ஹி.ச.)
தூத்துக்குடி குருஸ்புரம் புனித சூசையப்பர் ஆலயத்தில், கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் 50 பானைகளில் பொங்கலிட்டு, பொங்கல் விழாவை கொண்டாடினர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்துக்கள் தங்களது வீடுகளின்
முன்பு பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து வழிபட்டனர். இதேபோல, தூத்துக்குடியில்
கிறிஸ்தவர்களும் ஆலயத்தில் பொங்கலிட்டு விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
தூத்துக்குடி குரூஸ்புரத்தில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் அனைத்து சபைகளிலும் உள்ள அன்பியம் அமைப்பு சார்பில் பொங்கலிடப்பட்டது.
மொத்தம் 50 பானைகளில்
பொங்கல் தயார் செய்யப்பட்டது.
பின்னர், சூசையப்பர் ஆலய பங்குதந்தை கிஷோக் முன்னிலை வகித்தார்.
இதைத்தொடர்ந்து பொங்கல் பானைகளில் இருந்த சர்க்கரை பொங்கல் அனைவருக்கும்
வழங்கப்பட்டது. இதில், 500க்கும் மேற்ப்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்
கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டு இதுபோன்று எந்த இயற்கை பேரிடரும் ஏற்படாமல் அனைவரும் உடல் நலத்துடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு சிறப்பு பிரார்த்தனை
மேற்கொள்ளப்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam