யுஜிசி நெட் தேர்வுக்குரிய தற்காலிக விடைக்குறிப்பு இன்று வெளியீடு
புதுடெல்லி, 15 ஜனவரி (ஹி.ச.) இந்திய அளவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான ஒன்றிய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வே
யுஜிசி நெட் தேர்வுக்குரிய தற்காலிக விடைக்குறிப்பு இன்று வெளியீடு


புதுடெல்லி, 15 ஜனவரி (ஹி.ச.)

இந்திய அளவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான ஒன்றிய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இருமுறை கணினி வழியில் நடைபெறும். அதன்படி 2025ம் ஆண்டுக்கான 2ம் கட்ட யுஜிசி நெட் தேர்வு கடந்த டிசம்பர் 31 முதல் ஜனவரி 7ம் தேதி வரை பாடவாரியாக நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர்.

தொடர்ந்து தேர்வுக்குரிய தற்காலிக விடைக்குறிப்பு மற்றும் பட்டதாரிகளின் விடைத்தாள்களை என்டிஏ இன்று (ஜனவரி 15) வெளியிட உள்ளது.

இவற்றை /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்காலிக விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் தெரிவிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும்.

மேலும், கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி மூலமாக தொடர்புக் கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று தேசிய தேர்வுகள் முகாமை அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b