Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கட்டா், 15 ஜனவரி (ஹி.ச.)
வெளவால் போன்ற உயிரினங்களிடமிருந்து மனிதர்களுக்கு நிஃபா வைரஸ் தொற்றுகிறது.
மேற்கு வங்காளத்தில், இரண்டு நர்ஸுகளுக்கு நிஃபா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இவர்களில் ஒருவர், பூர்பா வர்த்தமான் மாவட்டத்தில் இருக்கும் கட்வாவைச் சார்ந்தவர். அண்மையில் சொந்த ஊருக்கு சென்று திரும்பிய இவர், நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, புர்த்வான் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு கொல்கத்தாவில் இருக்கின்ற பெலியகட்டா ஐ.டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதே போன்று, நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற மற்றொரு நர்ஸ், வங்கதேச எல்லையான மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டம் குக்ரகாச்சி பகுதிக்கு சமீபத்தில் சென்றபோது, நிஃபா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இவரும், கொல்கத்தா பெலியகட்டா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பாதிக்கப்பட்ட இரண்டு நர்ஸ்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.
இருவரும் இன்னும் சுயநினைவு இல்லாமல் இருப்பதால், தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM