5 ஆண்டுகளாக காதலித்த பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி- இளைஞர் கைது!
கடலூர், 15 ஜனவரி (ஹி.ச.) சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்த கடலூர் மாவட்டம் சிறு தொண்டமாதேவி பகுதியை சேர்ந்த துரைராஜூம் அதே நிறுவனத்தி்ல் வேலை பார்த்து வந்த திண்டிவனம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளம்பெண்ணும
5 ஆண்டுகளாக காதலித்த பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது


கடலூர், 15 ஜனவரி (ஹி.ச.)

சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்த கடலூர் மாவட்டம் சிறு தொண்டமாதேவி பகுதியை சேர்ந்த துரைராஜூம் அதே நிறுவனத்தி்ல் வேலை பார்த்து வந்த திண்டிவனம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.

இருவரும் சுமார் 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த இளம் பெண்ணிடம் இருந்து துரைராஜ் பணம் வாங்கி உள்ளார்.

மொத்தம் ரூ.5 லட்சம் வாங்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த பெண்ணிடம் பேசுவதை திடீரென தவிர்த்த துரைராஜ் அவரை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததோடு, வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கேட்டபோது,

அந்த இளம்பெண்ணை துரைராஜ் திட்டியதாக தெரிகிறது.

இச்சம்பவம் தொடர்பாக அந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில் துரைராஜை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / vidya.b