Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 15 ஜனவரி (ஹி.ச.)
புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களின் விவரங்களை கேட்டு, அனைத்து துறைகளுக்கும் சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்புகள் அடுத்த சில வாரங்களில் வெளியாக உள்ளது. தேர்தல் பணியில் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள் பட்டியலை வரும் ஜனவரி19ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் பணிக்காக, பரிந்துரை செய்யப்படும் ஊழியர் பெயர், அவரின் தொகுதி, வாக்காளர் அட்டையாள அட்டை, மொபைல் போன் எண், மாற்றுத்திறனாளி விவரம் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என, கணக்கு மற்றும் கருவூலக துறை அனைத்து துறைகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b