Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 ஜனவரி (ஹி.ச.)
திருவள்ளுவர் தினம் இன்று தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவள்ளுவர் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் உயர்ந்த நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஜனவரி 16) வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். திருவள்ளுவர் அவர்களின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் உயர்ந்த நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன.
மேலும் பக்திமிகு வாழ்க்கைக்கும் இணக்கமான சமூகத்திற்கும் வழி வகுத்தன. அவரது மரபு நமது மகத்துவத்தை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து நம்மை வழிநடத்தும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b