Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 ஜனவரி (ஹி.ச.)
தெற்கு மற்றும் மத்திய இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் மண்டல அளவில் கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதே சமயம், ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சி தீவிரம்அடைந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிராந்தியத்தில் நிலவி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தற்போது இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். இஸ்ரேல் அதிகாரிகள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்தியக் குடிமக்கள் இஸ்ரேலுக்கு அத்தியாவசியமற்ற அனைத்துப் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், இந்தியக் குடிமக்கள் இந்தியத் தூதரகத்தின் 27 உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அவசர தேவைகளுக்கு 4972-54-7520711; 4972-54-3278392 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM