காங்கிரஸ் மாடல் ஆட்சி - மாணிக்கம் தாகூர் எம்.பி
தமிழ்நாடு, 16 ஜனவரி (ஹி.ச.) மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் குறித்து விருதுநகர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: கூட்டணி அரசியலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்ற போது எப்போ
மாணிக்கம் தாகூர்


தமிழ்நாடு, 16 ஜனவரி (ஹி.ச.)

மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் குறித்து விருதுநகர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

கூட்டணி அரசியலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்ற போது எப்போதும் ஒரு தெளிவான முடிவை எடுக்கிறது.

பொதுபணித்துறை, பாசனத் துறை, நெடுஞ்சாலைதுறை, சுரங்கங்கள், நகர்ப்புற வளர்ச்சி போன்ற வளமிக்க துறைகளை காங்கிரஸ் தேடி போவதில்லை.

மகாராஷ்டிரா, கேரளா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில், மக்களை மையமாகக் கொண்ட துறைகள் சுகாதாரம், ஊரக வளர்ச்சி, சமூக நீதி, பெண்கள் & குழந்தைகள் நலன், காதி & கைத்தறி ஆகியவற்றையே காங்கிரஸ் பொறுப்புடன் ஏற்றுள்ளது.

எங்களுக்கு அரசியல் என்பது ஒப்பந்தங்கள் அல்ல, மக்கள் சேவை.

அதுவே காங்கிரஸ் மாடல்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam