விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள் கூட்டம்
தென்காசி, 16 ஜனவரி (ஹி.ச.) தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே தற்போது சுற்றுலாப் பயணிகள் கூட்டம் என்பது அலைமோதி வருகிறது. குறிப்பாக, இன்றைய தினம் மாட்டுப் பொங்கல் விடுமுறை தி
Courtallam Aiyappa


தென்காசி, 16 ஜனவரி (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே தற்போது சுற்றுலாப் பயணிகள் கூட்டம் என்பது அலைமோதி வருகிறது.

குறிப்பாக, இன்றைய தினம் மாட்டுப் பொங்கல் விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலாத்தளங்களை நோக்கி சென்று வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தொடர் விடுமுறை காலம் என்பதால் இந்த சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், நாளைய தினம் காணும் பொங்கல் முன்னிட்டு ஏராளமானோர் சுற்றுலா தளங்களை நோக்கி செல்ல வாய்ப்புள்ளதால் குற்றாலத்தில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த போலீசார் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN