எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மைகளை அறம் பொருள் இன்பம் என கலந்துரைத்த தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன் - சி.பி.ராதாகிருஷ்ணன்
சென்னை, 16 ஜனவரி (ஹி.ச) உலகப் பொதுமறை திருக்குறள் தந்து வான்புகழ் கொண்ட திருவள்ளுவரின் திருநாளான இன்று அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று துணை குடியரசு தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன் எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். இது தொடர்ப
Cpr


Tw


சென்னை, 16 ஜனவரி (ஹி.ச)

உலகப் பொதுமறை திருக்குறள் தந்து வான்புகழ் கொண்ட திருவள்ளுவரின் திருநாளான இன்று அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று துணை குடியரசு தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன் எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

'அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்' என்னும் உலகப் பொதுமறை திருக்குறள் தந்து வான்புகழ் கொண்ட திருவள்ளுவரின் திருநாளான இன்று அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

'அன்பின் வழியது உயிர்நிலை' என அன்பையும் 'நல்லாற்றால் நாடி அருளாள்க' என அருளையும்

போற்றி 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை' என பல்லுயிர் ஓம்பலை முதன்மைப் படுத்தி எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மைகளை அறம் பொருள் இன்பம் என கலந்துரைத்த தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ