Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜனவரி (ஹி.ச.)
சென்னை ஜார்ஜ் டவுன் பகுதிகளில் உள்ள சாணிகுளம் திருவள்ளுவர் மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக துறைமுகம் மேற்கு பகுதி சார்பாக பொங்கட்டும் திராவிட சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இந்த சமத்துவ பொங்கல் விழாவில் 548 பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் நடிகை சுஹாசினி மணிரத்தனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் சேகர்பாபு, நடிகை சுஹாசினி மணிரத்னம் மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் சமத்துவ பொங்கல் விழாவில் கும்மி அடித்து, நடனமாடினர்.
பின்னர் செய்தியாளர்களைஉ சந்தித்த நடிகை சுஹாசினி பேசியதாவது,
பொங்கல் விழா சிறப்பாக நடந்தது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் அமைச்சருக்கும் நன்றி சொல்ல வேண்டும் எனவும் இன்றயை தினம் பெண்கள் அனைவரும் மிகவும் சந்தோஷத்துடன் பொங்கல் வைத்தனர்.
தமிழ்நாட்டின் சந்தோஷம் எவ்வளவு தூரம் போய் உள்ளது தமிழ்நாடு எங்கு உள்ளதும் என்பதை இந்த பொங்கல் நிகழ்ச்சி காட்டுகிறது என தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ