Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 16 ஜனவரி (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் கல்குறிச்சி சந்திப்பு பகுதியில் இந்த மாதம் இறுதியில் தென் மண்டல திமுக இளைஞரணி சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த இளைஞரணி சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தில் நடந்து சென்று இருக்கைகள் மேடை அமையும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து நிகழ்ச்சி வரைபடம் வைத்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் நிகழ்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வு பணியின் போது மாநில மாவட்ட நகர ஒன்றிய திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam