Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 16 ஜனவரி (ஹி.ச.)
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் கேரளாவைச் சேர்ந்த பீஜியன் என்பவருக்கு சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதலிலும் குளறுபடிகள் நடந்ததாக புகார் வந்தது.
இதையடுத்து, வேலூர் சிஎம்சி மருத்துவமனை மருத்துவர்களுக்காக தோட்டப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் அமலாக்கத்துறையினர் இன்று (ஜனவரி 16) சோதனை நடத்தி வருகின்றனர்.
மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினருடன் இந்த சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பணப் பரிவர்த்தனை, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
துப்பாக்கி ஏந்திய சிஐஎஸ்எஃப் வீரர்கள் துணையுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b