ஒன்றுபட்ட இந்து சக்தி வென்று தீரும் - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிகளுக்கு ஹெச்.ராஜா நன்றி
சென்னை, 16 ஜனவரி (ஹி.ச.) மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை நீதியரசர்களுக்கு இந்த தருணத்தில் முருக பக்தர்கள் அனைவரின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள
Hraja


He


சென்னை, 16 ஜனவரி (ஹி.ச.)

மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை நீதியரசர்களுக்கு இந்த தருணத்தில் முருக பக்தர்கள் அனைவரின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் திருக்கோயிலின் தலவிருட்சமான கல்லத்தி மரத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த பிறை கொடியை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட பின்னரும் வழக்கு பதிவு செய்திருக்கிறோம் என்று மட்டும் கூறிவிட்டு காவல்துறை அக்கொடியை அகற்றாமல் இருந்தது.

திருப்பரங்குன்றத்திற்கு நேரில் சென்று நாம் போராடியதைத் தொடர்ந்து தற்போது கல்லத்தி மரத்தில் கட்டப்பட்டிருந்த கொடியை காவல்துறை அகற்றி இருக்கிறது.

கல்லத்தி மரத்தை தரிசிக்கச் சென்று அம்மரத்திலிருந்த பிறை கொடியை அகற்றக் கோரி நாம் போராடிய தருணத்தில் நம்மோடு இணைந்து குரல் கொடுத்து போராடிய திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் அதிலும் குறிப்பாக தாய்மார்கள் மற்றும் அச்சமயம் நம்மோடு உடனிருந்து போராடிய மதுரை மாவட்ட பாஜக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றுபட்ட இந்து சக்தி வென்று தீரும்

சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்பமை மதுரை கிளையின் நீதியரசர்களுக்கும் இந்த தருணத்தில் முருக பக்தர்கள் அனைவரின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எச். ராஜா பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ