சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் தெப்பக்குளம் சுவர் ரூ. 1.43 கோடி சீரமைக்க டெண்டர் !
கன்னியாகுமரி, 16 ஜனவரி (ஹி.ச.) தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள அருள்மிகு தாணுமாலயசுவாமி திருக்கோயில் தெப்பக்குளத்தின் ஒருபகுதி கருங்கல் சுவரை பழமை மாறாமல் மீண்டும் கட்டும் பணிக்காக மின்னண
கோவில்


கன்னியாகுமரி, 16 ஜனவரி (ஹி.ச.)

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள அருள்மிகு தாணுமாலயசுவாமி திருக்கோயில் தெப்பக்குளத்தின் ஒருபகுதி கருங்கல் சுவரை பழமை மாறாமல் மீண்டும் கட்டும் பணிக்காக மின்னணு ஒப்பந்தப்புள்ளி அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்புள்ளி படிவங்களை 13.01.2026 முதல் 27.01.2026 மாலை 5.45 மணி வரை https://intenders.gov.in இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

ஒப்பந்தப்புள்ளிகள் 28.01.2026 காலை 11 மணி வரை பெறப்பட்டு, அதே நாள் மாலை 4 மணிக்கு திறக்கப்படும்.

இந்த பணியின் மதிப்பீடு ரூ.1.43 கோடி. ஒப்பந்தத் தொகை ரூ.1,36,69,251; முன் வைப்பு தொகை ரூ.77,850. பணிக்காலம் 66 நாட்கள்.

தமிழ்நாடு அரசு துறைகள்/நிறுவனங்களில் பதிவு பெற்ற அனுபவமுள்ள ஒப்பந்தக்காரர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட எஸ்தபதிகள் பங்கேற்கலாம்.

ஒப்பந்தக்காரர் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / Durai.J