கேரளாவின் கொல்லத்தில் 2 தடகள வீராங்கனைகள் விளையாட்டு ஆணைய விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை
திருவனந்தபுரம், 16 ஜனவரி (ஹி.ச.) கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் நகரத்தில், ஒன்றிய அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி அரங்கம் அமைந்துள்ளது. இங்கு கோழிக்கோட்டை பகுதியைச் சார்ந்த சாண்ட்ரா (வயது 18), மற்றும் திருவனந்தபுரம் முத்தக்கலைச் ச
கேரளாவின் கொல்லத்தில் 2 தடகள வீராங்கனைகள் விளையாட்டு ஆணைய விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை


திருவனந்தபுரம், 16 ஜனவரி (ஹி.ச.)

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் நகரத்தில், ஒன்றிய அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி அரங்கம் அமைந்துள்ளது.

இங்கு கோழிக்கோட்டை பகுதியைச் சார்ந்த சாண்ட்ரா (வயது 18), மற்றும் திருவனந்தபுரம் முத்தக்கலைச் சேர்ந்த வைஷ்ணவி (வயது 15) எனும் இரு இளம் தடகள விளையாட்டு வீராங்கனைகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் விளையாட்டு ஆணையத்தின் தங்கும் விடுதியில் தங்கி, தங்கள் விளையாட்டு திறன்களை மேம்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், வழக்கம்போல் அவர்கள் காலையில் பயிற்சிக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக விளையாட்டு வீராங்கனைகள், அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்பொழுது, அந்த அறையின் உள்ளே சாண்ட்ரா மற்றும் வைஷ்ணவி ஆகிய இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை நேரில் கண்ட சக வீராங்கனைகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி, சம்பவ இடத்திலேயே தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், இரு இளம் வீராங்கனைகளின் இந்த தற்கொலைக்கான காரணம் உடனடியாக புலப்படவில்லை. இது குறித்து காவல்துறையினர் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM