Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 16 ஜனவரி (ஹி.ச.)
கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பரவூரை சேர்ந்த சாதிக் (வயது46) என்பவருக்கு கடந்த மாதம் 30-ந்தேதி லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்தது.
அதனை வேறொருவரிடம் அதிக தொகைக்கு விற்பனை செய்ய சாதிக் முயன்றதாக கூறப்படுகிறது.
இதையறிந்த கும்பல் ஒன்று அவரிடம் இருந்து அதிக தொகைக்கு லாட்டரி டிக்கெட்டை பெற்றுக்கொள்வதாக கூறி சாதிக்கை பரவூர் நகருக்கு வரவழைத்தனர்.
அதை நம்பி தனது நண்பருடன் சாதிக் வாகனத்தில் சென்ற போது அங்கே வந்த கும்பல் இருவரையும் வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்டு சென்றனர்.
சிறிது தூரம் சென்ற பின் சாதிக்கின் நண்பரை பாதி வழயில் இறக்கிவிட்டு சாதிக்கிடமிருந்து
அந்த லாட்டரி டிக்கெட்டை பறித்துக்கொண்டு இரவு 11.30 மணியளவில் சாதிக்கை இறக்கி விட்டனர்.
இதனைத் தொடர்ந்து சாதி போலீசில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மர்ம கும்பலை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.
மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு வென்றவரை ஒருகும்பல் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam