Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜனவரி (ஹி.ச.)
சென்னை கலைவாணர் அரங்கத்தில் சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி -2026 இன்று தொடங்கி வரும் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி மற்றும் கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பன்னாட்டு புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா மேடையில் பேசியதாவது:
இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் எல்லையே இல்லை, சென்னை பன்னாட்டு புத்தக காட்சியை போலவே கர்நாடகாவிலும் சர்வதேச புத்தகக் காட்சியை தொடங்கவுள்ளோம்.
விரைவில் அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். எதற்கு அனுபவம் வாய்ந்த தமிழ்நாடு அமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
கிராமப்புறங்களில் சுமார் 5000 நூலகங்களை அமைத்திருக்கிறோம் இதன் மூலம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளோம்.
தினமும் ஒரு கோடி பள்ளி மாணவர்கள் அரசியலமைப்பு முகவுரையை படிக்கிறார்கள்.
பள்ளிகளில் மூன்று வேறு முறையை அமல்படுத்தியுள்ளோம் இதன் மூலம் மாணவர்கள் இடைநிற்றல் குறையும். இருமொழிக் கல்வியை பின்பற்றி வருகிறோம். தமிழ் மலையாளம் மராத்தி உள்ளிட்ட அதிகம் பேசக்கூடிய மொழிகள் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா பேசியதாவது,
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டை போல கர்நாடகமும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
எங்களுக்கென்று தனியான கலாச்சாரம், மொழி, பண்பாடு இருக்கிறது.
நாங்கள் எங்கள் தாய் மொழியை மதிக்கிறோம் எங்கள் எந்த மாநிலத்திலும் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது எங்களிடம் மாநில கல்விக் கொள்கை உள்ளதால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது.
தமிழ்நாட்டை போல கர்நாடகத்திற்கும் கல்வி நிதி தர மத்திய அரசு பாகுபாடு காட்டி வருகிறது அதற்கும் தமிழ்நாடு சேர்ந்து போராடி வருகிறோம்.
தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது குறித்தான கேள்விக்கு,
மத்திய கல்வி அமைச்சர் தான் குழப்பத்தில் இருக்கிறார். மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு தெரிந்த ஒரே மொழி மோடியின் மொழி. அதுதான் பிரச்சனை என தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam