Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜனவரி (ஹி.ச.)
பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
விடுமுறை நாளான இன்று குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் கடற்கரைக்கு திரண்டு வருகின்றனர்.
மக்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மெரினா கடற்கரை முழுவதும் காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூட்ட நெரிசலில் குழந்தைகள் தொலைந்து போகாமல் இருக்க, குழந்தைகளின் விவரங்கள் அடங்கிய அடையாள பேண்ட்கள் அவர்களின் கைகளில் அணிவிக்கப்படுகின்றன.
பாதுகாப்பு நடவடிக்கையாக 14 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்களின் வசதிக்காக 40 தண்ணீர் டேங்குகள் மற்றும் 10 தற்காலிக கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.பாதுகாப்பு பணிக்காக 2,500 காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சாலையோரங்களில் உயர் மின்விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / GOKILA arumugam