ஜம்மு காஷ்மீர்‌ எல்லையில்‌ மீண்டும் பாகிஸ்தான்‌ ட்ரோன்கள்‌- சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்
ஸ்ரீநகர்‌, 16 ஜனவரி (ஹி.ச.) இந்தியா - பாகிஸ்தான்‌‌ இடையேயான எல்லைகளை ஒட்டியுள்ள சம்பா, ராம்கார்‌, பூஞ்ச் போன்ற வட்டாரங்களில் நேற்று இரவு பாகிஸ்தானிய ட்ரோன்கள்‌ வட்டமிட்டன. எல்லைப் பாதுகாப்புப் பணியில் நிலை கொண்டிருந்த நம் வீரர்கள், அந்த ட்ரோன்கள
ஜம்மு காஷ்மீர்‌ எல்லையில்‌ மண்டும்‌ பாகிஸ்தான்‌ ட்ரோன்கள்‌ - சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்


ஸ்ரீநகர்‌, 16 ஜனவரி (ஹி.ச.)

இந்தியா - பாகிஸ்தான்‌‌ இடையேயான எல்லைகளை ஒட்டியுள்ள சம்பா, ராம்கார்‌, பூஞ்ச் போன்ற வட்டாரங்களில் நேற்று இரவு பாகிஸ்தானிய ட்ரோன்கள்‌ வட்டமிட்டன.

எல்லைப் பாதுகாப்புப் பணியில் நிலை கொண்டிருந்த நம் வீரர்கள், அந்த ட்ரோன்களைத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.

சென்ற ஒரு வாரத்தில் மட்டும்‌ மூன்றாம் முறையாக சர்வதேச எல்லைக்குள் பாகிஸ்தான் நாட்டு ட்ரோன்கள்‌ ஊடுருவியிருக்கின்றன.

இதன் விளைவாக, எல்லைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக ராணுவம் அறிவித்துள்ளது.

ஜனவரி மாதம் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரைக்கும் ஏறத்தாழ 15 ட்ரோன்கள்‌ எல்லைப் பிரதேசத்தில் அனுமதியின்றி நுழைந்ததாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்த வாரம் எல்லைகளில் திரும்பத் திரும்ப பாகிஸ்தான் நாட்டு ட்ரோன்கள்‌ காணப்பட்ட நிகழ்வுகளுக்கு மத்தியில், ராணுவத் தலைமை தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்.

விரோதியின் ஒவ்வொரு அசைவையும் நம் ஆயுதப் படைகள் கூர்மையாக கவனித்து வருகின்றன என்று உபேந்திர திவேதி சொன்னது கவனிக்கத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM