பாலமேடு ஜல்லிக்கட்டு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிற்பத்தை நினைவுப்பரிசாக நடிகர் சூரி வழங்கினார்
மதுரை, 16 ஜனவரி (ஹி.ச.) மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜனவரி 16) காலை தொடங்கியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகள் களம் காண்கின்றன, 600-க்கும் மேற்பட்ட மாடுபி
பாலமேடு ஜல்லிக்கட்டு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிற்பத்தை நினைவுப்பரிசாக நடிகர் சூரி வழங்கினார்


மதுரை, 16 ஜனவரி (ஹி.ச.)

மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜனவரி 16) காலை தொடங்கியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகள் களம் காண்கின்றன, 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது போட்டியை கண்டுகளிப்பதற்காக நடிகர் சூரி, ஜல்லிக்கட்டு அரங்கத்துக்கு வருகை தந்தார்.

அப்போது சிறப்பு விருந்தினராக வருகை தந்து போட்டியை தொடங்கி வைத்த துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிற்பத்தை நினைவுப்பரிசாக சூரி வழங்கினார்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் சூரி பேசியதாவது:

ஜல்லிக்கட்டு கலாசாரம் இடையில் குறையக்கூடிய சூழல் வந்தது. மீண்டும் எழுச்சிபெற்று தற்போது சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பாலமேடு ஜல்லிக்கட்டு சென்ற வருடத்தைவிட இந்த வருடம் இன்னும் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b