Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜனவரி (ஹி.ச.)
மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் சங்கராந்தி கொண்டாட்டங்களை தீவிரப்படுத்தும் வகையில், அவரது பிரம்மாண்டமான பான்-இந்தியா ப்ரீயட் ஆக்ஷன் திரைப்படமான SYG சம்பரால எட்டிகட்டு-இன் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
ரோஹித் KP இயக்கத்தில், K நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி தயாரிப்பில், ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட் ப்ளாக்பஸ்டர் ஹனுமேன் தயாரித்த நிறுவனம் இந்த மாபெரும் படத்தை உருவாக்குகிறது.
இந்த பிரம்மாண்டத் திரைப்படம், கிராமத்து வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு, அழுத்தமான மற்றும் தீவிரமான ப்ரீயட் ஆக்ஷன் களத்தில் உருவாகிறது. சமீபத்தியபோஸ்டர், சாய் துர்கா தேஜை இதுவரை காணாத ஒரு கிராமத்து அவதாரத்தில் வெளிப்படுத்தி, பார்வையாளர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுக்கிறது.
மண் மணக்கும் கிராமத்து இளைஞனாக , சாம்பல் நிற சட்டையும் பாரம்பரிய பஞ்ச கட்டு அணிந்து, காலில் செருப்பு இல்லாமல் நடந்து செல்லும் சாய் துர்கா தேஜ்—அருகில் ஒரு மகத்தான காளை மாட்டை இழுத்து செல்கிறார். அவரது அடர்த்தியான தாடி, தீவிரமான பார்வை, நுண்ணிய புன்னகை எல்லாம் இணைந்து, கடுமையும், உள்ளார்ந்த வெப்பமும் ஒன்றாக இணைந்து அவரது கதாப்பாத்திரத்தை அழகாக பிரதிபலிக்கின்றன.
இந்தக் கதாபாத்திரத்திற்காக, நடிகர் தனது உடல் அமைப்பையும், உடல் மொழியையும் முழுதாக மாற்றியுள்ளார். மண்ணோடு பிணைந்த மனிதனாக, தன் உலகில் உருவாகும் மோதல்களை எதிர்கொள்ளும் அவர், பல கடுமையான மற்றும் உடல் வலிமை தேவைப்படும் ஆக்ஷன் காட்சிகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார்.
முன்னதாக, அவரது பிறந்த நாளில் வெளியான அசுர ஆகமனம் க்ளிம்ப்ஸ், அதன் இருண்ட மனநிலை, உணர்ச்சிப் பூர்வமான காட்சிகள் மற்றும் பீரியட் கால சாயலுக்காக பெரும் பாராட்டுகளைப் பெற்றது. அந்த க்ளிம்ப்ஸ் கதையின் வன்முறை புயலை சுட்டிக்காட்டினால், சங்கராந்தி போஸ்டர்கள்—புயலுக்கு முன் நிலவும் அமைதியை அறிமுகப்படுத்துகின்றன.
வெற்றிவேல் பழனிசாமியின் அற்புதமான ஒளிப்பதிவு, B அஜனீஷ் லோக்நாத் யின் ஆழமான இசை, மற்றும் ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட்-உடைய சமரசமற்ற தயாரிப்பு தரம் SYG சம்பரால எட்டிகட்டு படத்தை, மண்ணின் உணர்ச்சியும், பிரம்மாண்டமான ஆக்ஷனும் கலந்த ஒரு சக்திவாய்ந்த படமாக உருவாக்குகின்றன.
Hindusthan Samachar / Durai.J