சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழா - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை, 16 ஜனவரி (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சுவாமி சகஜானந்தா, ஆன்மீக குரு நந்தனாரின் ஆன்மீகத்தை அனைத்து மக்களும் அறியும் வகையிலும் எளிய மக்களுக்கு தொண்டாற்ற சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் நந்தனார் இருந்த இடத்தில் வசித்து அவர
ஜனவரி 27,28 தேதிகளில் சுவாமி சகஜானந்தா பிறந்தநாள்  விழா ஏற்பாடுகள் தீவிரம்


திருவண்ணாமலை, 16 ஜனவரி (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சுவாமி சகஜானந்தா, ஆன்மீக குரு நந்தனாரின் ஆன்மீகத்தை அனைத்து மக்களும் அறியும் வகையிலும் எளிய மக்களுக்கு தொண்டாற்ற சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் நந்தனார் இருந்த இடத்தில் வசித்து அவரது புகழை பரப்பி வந்தார்.

பின்னர் அந்த இடத்தில் அனைத்து சமூகத்திலுள்ள ஏழை மக்கள் பிற்காலத்தில் கல்வியால் மட்டுமே உயர முடியும் என்ற உயரிய சிந்தனையோடு கடந்த 110 ஆண்டுகளுக்கு முன்பு திண்ணைப் பள்ளிகளை தொடங்கி மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்துள்ளார்.

அப்படி அவர் அன்று உருவாக்கிய பள்ளிகள் இன்று நந்தனார் பெயரில் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என இரு பாலருக்கும் தனித்தனியாக விடுதி வசதியுடன் இயங்கி வருகிறது. அதேபோல் சுவாமி சகஜானந்த பெயரில் தொழிற்கல்வி கூடமும் இயங்குகிறது. இது அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தமிழகத்திலேயே மிகப்பெரிய பள்ளியாக உள்ளது.

இதுமட்டும் இல்லாமல் சகஜானந்தா 42 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி எளிய மக்களின் குரலாக சட்டமன்றத்தில் ஒலித்துள்ளார். பட்டியல் மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி அம்மக்கள் குளத்தில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான உரிமையை பெற்று தந்துள்ளார்.

நந்தனார் வாழ்ந்த இடம் நந்தனார் மடமாக மாறியது. இதே இடத்தில் சாமி சகஜானந்தாவிற்கு சமாதி கோவிலும், சௌந்தரநாயகி சமேத சிவலோகநாதர் கோயிலும் அமைந்துள்ளது.

இந்நிலையில் சகஜானந்தாவின் கல்வி சேவையை போற்றும் வகையில் நந்தனார் ஆண்கள் பள்ளிவாயிலில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 27ம் தேதி அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது 32 ஆண்டுகளுக்கு பிறகு நந்தனார் கல்விக் கழகத்தின் தலைவர் கே.ஐ. மணிரத்தினம் மற்றும் நந்தனார் கல்விக்கழக உறுப்பினர்கள் இணைந்து நந்தனார் மடத்தை தற்போதைய கால சூழலுக்கு ஏற்றவாறு புண்ணிய பூமியாக மாற்றும் வகையில் நவீன முறையில் கோயில் மற்றும் நந்தனார் தியான மண்டபம் சீரமைத்து அதில் நந்தனார் மற்றும் சுவாமி சகஜானந்தா வரலாறுகள் காட்சிப்படுத்தப்பட்டு கோவில் குடமுழுக்கு விழா வருகிற சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் ஜனவரி 27-ந்தேதி தொடங்கி 28-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதில் அனைத்து அரசியல் கட்சியின் மூத்த தலைவர்கள், தலைவர்கள் அரசு உயர் அதிகாரிகள், நந்தனார் பள்ளியில் முன்னாள், இந்நாள் மாணவர்கள், சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள். மடாதிபதிகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும் வகையில் திருநாளை போவாரின் புகழ் திக்கெட்டும் பரவச் செய்யும் வகையில் ஏற்பாடுகள் வெகு விமர்சியாக துரிதமாக நடைபெற்று

வருகின்றது.

Hindusthan Samachar / vidya.b