Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜனவரி (ஹி.ச)
தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றி வரும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு, தமிழக அரசு வாயிலாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இந்தாண்டுக்கான திருவள்ளுவர் தின விழா விருதுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 16) வழங்கினார். அண்ணாதுரை விருது அமைச்சர் துரைமுருகனுக்கும், திரு.வி.க., விருது முன்னாள் தலைமை செயலர் இறையன்புவுக்கும் வழங்கப்பட்டது.
மேலும், திருவள்ளுவர் விருது - பேராசிரியர் சத்தியவேல் முருகனார், ஈ.வெ.ரா., விருது-வழக்கறிஞர் அருள்மொழி, அம்பேத்கர் விருது வி.சி., கட்சி எம்.எல்.ஏ., சிந்தனைசெல்வன், காமராஜர் விருது எழுத்தாளர் இதயத்துல்லா, பாரதியார் விருது -கவிஞர் நெல்லை ஜெயந்தா, பாரதிதாசன் விருது - கவிஞர் யுகபாரதி, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - பேராசிரியர் செல்லப்பா, கருணாநிதி விருது - விடுதலை விரும்பி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இதேபோல், தமிழக அரசு வழங்கும் இலக்கிய மாமணி விருதுகளில், மரபு தமிழ் விருது எழுத்தாளர் ராமலிங்கம், ஆய்வு தமிழ் விருது எழுத்தாளர் மகேந்திரன், படைப்பு தமிழ் விருது - எழுத்தாளர் நரேந்திரகுமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b