தேர்தல் பிரசாரக் குழு - தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
சென்னை, 16 ஜனவரி (ஹி.ச.) தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், சீட் பங்கீடு பேச்சுவார்த்தைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன
தேர்தல் பிரசாரக் குழு - தவெக தலைவர் விஜய் அறிவிப்பு


சென்னை, 16 ஜனவரி (ஹி.ச.)

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

கூட்டணி பேச்சுவார்த்தைகள், சீட் பங்கீடு பேச்சுவார்த்தைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. முதல் முறையாக தேர்தல் களம் காணும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, தேர்தல் பிரச்சாரக் குழுவை தவெக தலைவர் விஜய் அமைத்துள்ளார்.

தவெக பிரச்சார குழுவில் கட்சியின் பொதுச் செயலாளர் என் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, உயர்மட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, பின்வரும் முறையில், தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்படுகிறது.

தேர்தல் பிரசாரக் குழு விவரம்:

1. திரு. N.ஆனந்த்

2. திரு. ஆதவ் அர்ஜுனா B.A

3. திரு. K.A.செங்கோட்டையன்

4. திரு. A.பார்த்திபன்

5. திரு. B.ராஜ்குமார் DME

6. திரு. K.V.விஜய் தாழு

7.திரு. S.P.செல்வம் DCE

8.திரு. K.பிச்சைரத்தினம் கரிகாலன்

9. திரு. M.செரவு மைதின் (எ) நியாஸ்

10. திருமதி J.கேத்ரின் பாண்டியன் Μ.Α.. Β.Εd

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b