Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 16 ஜனவரி (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற பெருவுடையார் ஆலயம் என்கிற பெரியகோவிலில் மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஹாநந்திக்கு இன்று (ஜனவரி 16) சிறப்பு அலங்காரமும் தீபராதனையும் நடைபெற்றது.
சுமார் 2 ஆயிரம் கிலோ பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட கத்திரிக்காய் வெண்டிக்காய் பூசணிக்காய் கேரட் பீட்ரூட் உள்ளிட்ட அனைத்து வகை காய்கறிகள், ஆப்பிள் ஆரஞ்சு மாதுளை வாழை உள்ளிட்ட பழங்கள், மலர்கள், இனிப்பு வகைகள் கொண்டு மஹா நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அலங்கரிக்கப்பட்ட மஹா நந்திக்கு சிறப்பு சோடச உபசாரம் என்கின்ற 16 வகையான தீபாராதனைகள், பூஜைகள் காட்டப்பட்டது.
பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 108 பசுமாடு கன்றுகளுக்கு அலங்கரிக்கப்பட்டு மஞ்சள், சந்தனம், குங்குமிட்டு, மலர் தூவி, வேஷ்டி, சேலை, துண்டு போன்ற வஸ்திரங்களை போர்த்தி கோ-பூஜை வழிபாடும் நடத்தப்பட்டது.
வாழைப்பழங்கள் மற்றும் பொங்கல் மாடுகளுக்கு உண்ண கொடுக்கப்பட்டன. பசுமாட்டில் அவையங்களில் கொம்பு முதல் கால்கள் வரை முப்பத்து முக்கொடி தேவர்கள் வாழ்வதால் வேண்டும் வரம் வேண்டியபடி கிடைக்கும் என்பது ஐதீகம். கோ-பூஜை சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியெம்பெருமானை வழிபட்டனர்.
Hindusthan Samachar / vidya.b