Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜனவரி (ஹி.ச.)
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், புதிய கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதிலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16-ஆம் தேதி 'தேசிய ஸ்டார்ட்அப் தினம்' கொண்டாடப்படுகிறது.
வரலாறு மற்றும் நோக்கம்:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 2022-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதியை 'தேசிய ஸ்டார்ட்அப் தினமாக' அறிவித்தார்.
ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தை இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு செல்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
முக்கியத்துவம்:
புத்தாக்கம் - இளைஞர்களின் புதிய சிந்தனைகளுக்கும், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கும் இது ஒரு சிறந்த தளமாக அமைகிறது.
வேலைவாய்ப்பு - ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் லட்சக்கணக்கான இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன.
பொருளாதார வளர்ச்சி - 'யூனிகார்ன்' எனப்படும் பெரும் மதிப்புள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது.
சுயசார்பு இந்தியா - இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டிலேயே தயாரிப்புகளை உருவாக்குவதில் ஸ்டார்ட்அப்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இன்றைய இளைஞர்கள் வெறும் வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல், வேலை வழங்குபவர்களாக மாற வேண்டும் என்பதே இத்தினத்தின் தாரக மந்திரம்.
இந்தியாவை உலகளாவிய ஸ்டார்ட்அப் மையமாக மாற்றுவதற்கு இத்தினம் ஒரு உந்துசக்தியாக உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM