Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 16 ஜனவரி (ஹி.ச.)
வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் விஜய் தீவிரமாக களமிறங்கியுள்ளார்.
முந்தைய கட்சி விவரங்கள்,தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தில் ஆற்றிய பணிகளின் விவரங்களையும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை ஏதாவது தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் அது தொடர்பான விவரங்கள் மற்றும் வேட்பாளரின் சொத்து மதிப்பு,முகவரி உட்பட முழு சுய விவரம் முழுவதையும் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து தலைமைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
விஜய் இதனை பார்த்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 2 பேரிடம் விவரங்கள் சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தற்காலிக பட்டியல் தயார் செய்யப்பட்டிருந்த நிலையில் இறுதி பட்டியல் தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam