விலை உயர்ந்த 4 மோட்டார் சைக்கிள்களை திருடி விட்டு கேரளா தப்பி சென்ற நபர்கள் கைது!
தென்காசி, 17 ஜனவரி (ஹி.ச.) தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி மற்றும் குற்றாலம் பகுதியில் 4 மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி சென்ற நிலையில், இது தொடர்பாக குற்றாலம் மற்றும் தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்
Kutralam police station


தென்காசி, 17 ஜனவரி (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி மற்றும் குற்றாலம் பகுதியில் 4 மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி சென்ற நிலையில், இது தொடர்பாக குற்றாலம் மற்றும் தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், திருட்டு நடைபெற்ற இடத்தின் அருகாமையில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், தென்காசி மற்றும் குற்றாலத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கேரளாவிற்கு சென்று கொண்டிருக்கும் போது இலஞ்சி பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளானது பழுதான நிலையில், அந்த மோட்டார் சைக்கிளை அங்கே விட்டுவிட்டு மற்ற மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அந்த நபர்கள் தமிழக - கேரளா எல்லை வழியாக கேரள மாநிலத்திற்கு சென்று அங்குள்ள கழுதவுருட்டி என்கின்ற பகுதியில் மேலும் ஒரு மோட்டார் சைக்கிளை திருட முயற்சி செய்தபோது அங்கு இருந்தவர்கள் பார்த்து அதில் ஒரு நபரை விரட்டி சென்று பிடித்து தர்ம அடி கொடுத்து தென்மலை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த நிலையில், பிடிபட்ட ஒரு நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது,

அந்த நபர்கள் தென்காசி மாவட்டம் தென்காசி மற்றும் குற்றாலம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டியில் ஈடுபட்டு கேரளாவிற்கு வந்ததாக தெரிவித்த நிலையில் கேரளா போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் குற்றாலம் போலீசார் தற்போது கேரளாவை சேர்ந்த அந்த சிறுவனை கைது செய்து இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN