Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 17 ஜனவரி (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழத்தாயில்பட்டி, சிப்பிப்பாறை, கீழச்செல்லையாபுரம், மார்க்கநாதபுரம், விஜயரெங்கபுரம், கொம்மங்கியாபுரம்,கல்லமநாயக்கன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் வாழை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வாழை முழுவதும் கிணற்று பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ளது.
அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையினால் தோட்டத்தில் அதிகளவு களை வளர்ந்துள்ளது.
இந் நிலையில் வாழை மரத்தின் அடிப்பகுதியில் உள்ள களைகள் அப்புறப்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கீழத்தாயில் பட்டி விவசாயி தட்சணாமூர்த்தி கூறியது,
வாழை மரங்களுக்கு தேவை எப்போதும் இருப்பதால் இப்பகுதியில் வாழை மரங்கள் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறோம்.
மேலும் தொடர்ந்து மழை பெய்யாததால் கிணறுகளில் தண்ணீர் வெகுவாக குறைந்து இருக்கிறது. சாரல் மழை மட்டும் பெய்வதால் வாழை மரங்கள் காய்ந்து வருகின்றன.
தற்போது தோட்டத்தில் களைகள் அதிகளவு வளர்ந்ததால் அதனை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என கூறினார்.
Hindusthan Samachar / Durai.J